மாணவர்களுக்கு பசும் பால் வழங்கும் தேசிய நிகழ்வு இன்று ஆரம்பம்!

Tuesday, July 23rd, 2019

ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு தினந்தோறும் காலையில் பசும் பால் பக்கற் வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(23) இரத்தினபுரி, கலவான, கஜூகஸ்வத்த, சாஸ்திரோதய வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டளவில் இலங்கையில் பசும் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளின் போஷாக்கை மேம்படுத்தும் நோக்கத்துடனும் குறித்த இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கலவான, கஜூகஸ்வத்த சாஸ்திரோதய வித்தியாலயத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறும் அங்குரார்ப்பண நிகழ்வுக்கு அப்பிரதேசத்தின் 13 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 1500 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டதுடன் இணைந்ததாக கலவான பிரதேசத்தின் பாற் பண்ணையாளர்களுக்கு பல நன்மைகளை பெற்றுத் தருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts: