மாணவர்களுக்கு தெளிவூட்டுமாறு அறிவுறுத்தல்!

Tuesday, April 25th, 2017

நாளைய தினம் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.  இந்தநிலையில், பாடசாலை சூழலை சுத்தம் செய்தல் மற்றும் நிலவும் வெப்பமான காலநிலைக்கு முகம் கொடுப்பது குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்துமாறு கல்வி அமைச்சு பாடசாலை பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

இதற்கமைய, பெற்றோர், பழைய மாணவர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மாகாண சபை அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டு, பாடசாலை சூழல் நுளம்புகள் மற்றும் குப்பைகள் இன்றி இருப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக ஏற்படக் கூடிய சிரமங்களைத் தவிர்க்க மாணவர்களை வெளிச் செயற்பாடுகளுக்காக அனுப்புவதை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும், கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.  மேலும், குடிநீருக்காக வைக்கப்பட்டுள்ள தாங்கிகள் சுத்தமாக உள்ளதா என்பது குறித்தும் அவதானம் செலுத்துமாறு, அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: