பொதுமக்களின் காணிகளை மீளவழங்குவதே அரசின் நோக்கம் – ரெஜினோல்ட் குரே!

Sunday, December 11th, 2016

நாட்டிலேற்பட்ட யுத்தம் காரணமாகவே பொதுமக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றியிருந்ததாகவும் எனினும் யுத்தம் நிறைவடைந்த நிலையில் காணிகளை மக்களிடம் மீளக்கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் ரெயினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை  முல்லைத்தீவில் காணிப்பிரச்சினை தொடர்பில் மக்களிற்கும் வடமாகாண ஆளுநர் ரெயினோல்ட் குரேக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எனினும் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாகவே தமிழ் மக்களின் காணிகள் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் அவற்றை மீண்டும் மக்களிடம் கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை தொடர்ந்தும் இராணுவத்தால் மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ரெயினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழப்பாணத்தில் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் சிலருக்கு ஆரம்ப காலங்களிலிருந்து சொந்த காணிகளே இருக்கவில்லை எனவும் தற்போது அரசாங்கத்தாலே காணிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

_91199397_3a5a7016

Related posts: