மாணவர்களுக்கான TAB கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி !
Wednesday, May 8th, 2019
அரச பாடசாலைகளின் உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் வாராந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. இதன்போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் குறித்த திட்டம் மீண்டும் யோசனையாக முன்வைக்கப்பட்ட போது, இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.
குறித்த திட்டத்திற்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமை ஒரு லட்சத்து 83 ஆயிரம் டெப் கருவிகள் மாணவர்களுக்காக வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீ.ரி.ஸ்கானர் பழுதால் யாழ் போதனா வைத்தியசாலை: நோயாளர்கள் சிரமம்!
டெல்லியின் வணிக வளாக தீ விபத்து - 27 பேர் பலி ; 40 பேர் படுகாயம்!
டெங்கு தொற்றால் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 31 பேர் உயிரிழப்பு - 48,963 பேருக்கு தொற்று உற...
|
|
|


