மாணவர்களுக்கான போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு குழு நியமனம்!

Tuesday, November 22nd, 2016

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தை பாதுகாப்பான முறையில் முனனெடுக்கவும், அந்த சேவையின் தரத்தை உயர்த்துவதும் இதன் நோக்காகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக 40,000 வாகனங்கள் சேவையில் ஈடுபடுகின்றன. இந்த குழுவை நியமிப்பது தொடர்பில் உரிய தரப்பினர்களிடையில் கலந்துரையாடல் நடத்தியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கூறினார். எதிர்வரும் சில தினங்களில் இது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

school-student-transport

Related posts:

அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவுக்கு ஐ.நா பாராட்டு!
அடுத்த சில நாட்களில் இலங்கைக்கான தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடப்படும் - இலங்கைக்கான ச...
ஜனாதிபதி - அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே இடையே நாளை சந்திப்ப...