மாகாண சபை தேர்தல்: விசேடமாக தயாரிக்கப்பட்ட வாக்குச் சீட்டு!

Sunday, June 16th, 2019

மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தேர்தல்கள் ஆணையாளரால் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதன்போது, தேர்தல் தொடர்பாக பலவிதமான கருத்து பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் வாக்காளர் ஒருவர், போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் தமது வாக்கினை வழங்காத நிலையில், விசேடமாக தயாரிக்கப்பட்ட வாக்குச் சீட்டின் மூலம் வாக்கினை பதிவு செய்யலாம் என தெரிவித்தார்.

இந்த நடைமுறை கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இந்திய தேர்தல் வாக்குப் பதிவுகளில் இடம்பெறுகின்றது. இந்த நடைமுறை பின்பற்றப்பட்டால், நிராகரிக்கப்படும் வாக்குகளை  அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணையக அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.


எவ்வாறிருப்பினும், இந்த முறைமைக்கு எந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஆர்வம் காட்டாததனை அடுத்து இந்த திட்டம் கைவிடப்பட்டதாக தகவலகள் தெரிவிக்கின்றன.

Related posts:

நாட்டின் நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவ...
சனல் 4 வெளியிட்ட வீடியோ அறிக்கைக்கு பதிலளிக்காமல் இருக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானம்!
குவைத் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் - அமைச்சர் மனுஷ நாணயக்கா அழைப...

சட்டவிரோதமாக குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – தகவல் தருமாறு அரச அதிபர் கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் கட்டுப்பாடுகளுமின்றி பெருகிவரும் குடிநீர் வியாபாரம் - உள்ளூராட்சி சபைகள் கவனம் செல...
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் - நல...