மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – பெஃப்ரல் அமைப்பு!

Tuesday, January 1st, 2019

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் விரைவில் நாடாளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தவிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

6 மாகாண சபைகளின் அதிகார காலம் நிறைவடைந்துள்ளது. எனினும் அவற்றுக்கான தேர்தல், மாகாண எல்லை மறுசீரமைப்பு அறிக்கை குறித்த மீளாய்வுப் பணிகள் தாமதித்துள்ளமையால், நடத்தப்படாதுள்ளது.

இந்தநிலையில் பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள மீளாய்வுக் குழு தமது அறிக்கையை 2 மாதங்களுக்குள் கையளிக்க வேண்டும் என்றும் பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Related posts: