மாகாண சபைகளை மாகாண அரசு என்று அழைக்கக்கூடாது அரசமைப்பில்கூட அப்படி இல்லை என்கிறார் மைத்திரி!
Wednesday, February 6th, 2019
மாகாண சபைகளை , மாகாண அரசுகள் என்று அழைக்கக்கூடாது என்று நிதி ஆணைக்குழுவுக்கு மைத்திரிபால சிறிசேன கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அரசமைப்பில் மத்திய அரசு மாகாண அரசு என்று கூறப்படவில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட முறைமையை ஆய்வு செய்வதற்கான தேவையை முன்னைய அரசுகள் புறக்கணித்து வந்துள்ளன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதுபற்றிய ஆய்வு நடத்த இரண்டு முறை அமைச்சரவைக்குத் தாம் முன்மொழிந்ததாகவும் முன்னாள் தலைமை அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தலைமையில் ஒரு குழுவை நியமித்தபோதும் அது செயற்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜனாதிபதி சீஷெல்ஸ் விஜயம்!
கலாசார மண்டபத்தின் நோக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்க முடியாது - சபையில் முன்னாள் முதல்லர் யோகேஸ...
பொலிசாரால் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட மாட்டாது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
|
|
|


