மாகாணசபை ஆட்சியின் பின்னரே வடக்கின் கல்வி வீழ்ச்சி: இறுதி நிலையில் கிளிநொச்சி மாவட்டம் மாவட்டம் – தீவக வலயம் கடை வலலயம் – வெளியானது அதிர்ச்சித் தகவல் !

Sunday, July 12th, 2020

வடக்கு மாகாண கல்வியில் கிளிநொச்சி மாவட்டம் இலங்கையின் 25 ஆவது இறுதி மாவட்டமாகவும்  தீவகம் இலங்கையில் உள்ள 104 வலயங்களில் இறுதி வலயமாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது .

இலங்கையின் கல்வித்துறையில் கொடிகட்டிப் பறந்த வடக்கு மாகாணம் இன்று கல்வியின் கடைநிலைகளை அலங்கரித்து செல்லும் துர்பாக்கிய நிலையைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 யுத்தகாலத்தில் வடக்கு நிர்வாகம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கைகளிலிருந்த போது மேல் மாகாணத்துக்கு அடுத்தபடியாக வடக்கு மாகாணம்  கல்வி நிலையில் கொடிகட்டிப் பறந்தது .

இலங்கை நாடாளுமன்றத்தை அலங்கரித்த முதல் சபாநாயகராக வைத்திலிங்கம் துரைசாமி என்பவர் தீவக வலயத்தில் இருந்து நாடாளுமன்றம் சென்று இருந்தார். ஆனால் இன்று தீவகத்தின் கல்வி நிலை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபை ஏற்படுத்தப்பட முன்னர் வடமாகாண ஆளுநராக இருந்த ஜி.எ சந்திரசிறி மற்றும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா ஆகிய இருவரினதும் பெரு முயற்சியினால் வடக்கு கல்வி துறையானது முன்னோக்கிச் சென்றாது.

கல்வித்துறையும் நிர்வாகத்தையும் திறம்பட க்கட்டி எழுப்பப்பட்ட அக் காலத்திற்கு பின்னர் வடக்கு மாகாணசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தம் வசப்படுத்திய நாட்களிலிருந்து வடக்கு கல்வி சரிவுப்பாதையை நோக்கி செல்ல ஆரம்பித்தது .  வடக்கு கல்வித்துறையில் முறையான திட்டங்களை வகுக்க முடியாத கல்வி அமைச்சரும் நடைமுறைப்படுத்தல்களில் செயல்திறன் அற்ற அதிகாரிகளும் இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு முதலமைச்சராக இருந்த சி வி விக்னேஸ்வரன் போன்றோர் வடக்கு கல்வி தொடர்பில் பதில் கூறுவார்களா ?

இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மாகாணத்தை அனைத்து துறைகளிலும் கட்டியெழுப்ப முயற்சிக்காமல் இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை வடக்கு மாகாணசபை தொடங்கிய நாட்களிலிருந்து ஐந்தாவது வருடம் நிறைவடையும் வரை பேசியதே மிச்சமாக உள்ளது .

தமது அரசியல் இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக முடிந்துபோன தமிழர் விடுதலைப் போராட்டங்களை மக்கள் மத்தியிலே மீண்டும் விதைத்து தமது வாக்குகளை  பெற்றுக்கொள்வதற்காகவே வடக்கு மாகாண சபையைஅரசியல்வாதிகள் பயன்படுத்தினார்கலே தவிர மக்களையும் அவர்களுக்கான அபிவிருத்திகள் பற்றியும் சிந்திக்க தவறி விட்டார்கள் .ஆகவே வடக்கு மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக சர்வதேச விசாரணையை கோருபவர்கள் முதலில் தமது மக்களுக்கு தம்மால் இழைக்கப்பட்ட  அநீதிகளுக்கு நீதி வழங்க வேண்டும். 

ஆகவே தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் சமச்சீராக பயணிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை தமிழ் மக்கள்  பலப்படுத்தும் போது அவர் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை அவர் ஏற்படுத்திக் கொடுப்பார் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

Related posts: