நியூஸிலாந்து தாக்குதல்தாரி நாடு கடத்தலை எதிர்கொண்டிருந்தார் – அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவிப்பு!

Sunday, September 5th, 2021

நியூசிலாந்தில் கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்ட அஹமட் அடில் முகமது சம்சுதீன் என்ற இலங்கையரை நாடு கடத்த நியூசிலாந்து பல ஆண்டுகளாக முயற்சித்து வந்ததாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

அத்து;டன் அவரது புகலிடம் இரத்து செய்யப்பட்ட பின்னர், ஏப்ரல் 2019 இல் நாடு கடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், சட்ட நடவடிக்கைகள் காரணமாக அவரது நாடுகடத்தல் இழுபறியில் இருந்துள்ளது.

சம்சுதீன் 2011 ஆம் ஆண்டு 22 வயதுடைய மாணவர் விசாவில் நியூசிலாந்திற்கு வந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சம் பெற்றார். 2016 ஆம் ஆண்டில், அவர் பயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி, தனது முகநூல் கணக்கில் இடுகையிட்ட பிறகு காவல்துறை மற்றும் உளவுத்துறையின் கண்காணிப்பின்கீழ் வந்தார்.

தீவிரவாதி, மோசடியாக புகலிடம் பெற்றார் என்பது அவர்களின் விசாரணையில் தெரியவந்தது, மேலும் இந்த செயல்முறை நியூசிலாந்தில் தங்குவதற்கான அவரது உரிமையை செல்லாததாக்க தொடங்கியது, என ஆர்டன் கூறினார்.

அடுத்த ஆண்டு அவர் ஒக்லாந்து விமான நிலையத்தில் சிரியா செல்லத் தயாராவதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார், மேலும் அவரது வீட்டை சோதனையிட்ட போது, ஒரு பெரிய ராம்போ கத்தி மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பிரச்சாரம் தொடர்பான பொருட்களை பொலிசார் கண்டுபிடித்தனர்.

சம்சுதீன், நியூசிலாந்தில் இருந்தபோது தன்னை ஒரு தமிழ் முஸ்லீம் என்று அறிமுகப்படுத்திய பயங்கரவாதி, அவரை நாடு கடத்தலுக்கு எதிராக மேல்முறையீடு செய்தார். அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், இலங்கையில் கைது, தடுப்பு மற்றும் சித்திரவதைகளை சந்திக்க நேரிடும் என்று  நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

நியூசிலாந்தின் காலாவதியான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும், நியூசிலாந்தின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மாற்றங்கள் மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆர்டன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


முதலில் நாம் வாழ வேண்டும், பின்னர் வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து சிந்திக்கலாம் – கிடைக்கின்ற தடுப...
காலநிலை மாற்றம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒரு வாரத்தில் அமைச்சரவைக்கு - ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசக...
எதிர்வரும்(09) வரையான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் கனமழை கிடைக்கும் - மூத்த விரிவுரையாளர் பிர...