தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் இடமாற்றம் உண்டு – கல்வி அமைச்சர்!
Monday, October 30th, 2017
ஆசிரியர்கள் மாத்திரமன்றி, 10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசலையில் சேவையாற்றும் தேசிய பாடசாலை அதிபர்களும் ஏனைய பாடசாலைகளுக்கான இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
காலி றிச்மன்ட் கல்லூரியில இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வு நேற்றுளூ இடம்பெற்றது.
கல்வி கட்டமைப்பின் சிறப்பான செயற்பாட்டிற்காக சரியான தீர்மானங்களை மேற்கொள்வதில் தாம் எந்த வகையிலும் பின்னிற்கப் போவதில்லை என்றும் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், தெரிவித்தார்.
Related posts:
ஒரு டொலருக்கு கீழ் சென்ற கச்சா எண்ணெயின் விலை!
ஓகஸ்ட் மாதத்திற்குள் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் - அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் நம்பிக்கை!
ஆட்சியாளர்களின்அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை - அந்தந்தக் காலச...
|
|
|


