மஹிந்தவை ச ந்திக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள்!

Tuesday, October 17th, 2017

நுவரெலியா மாவட்டத்தின் உள்ளுராட்சி சபை எல்லைகளை அதிகரிப்பதைக் காரணம் காட்டி உள்ளுராட்சித் தேர்தலைப் பிற்போடக்கூடாது என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பில் கஃபேஇ பெஃப்ரல் உள்ளிட்ட தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

நுவரெலியா மற்றும் அம்பேகமுவ ஆகிய பிரதேச சபைகளின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு அங்கு மேலும் பல உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.ஆனால் இதுதொடர்பில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு இறுதி தீர்மானம் ஒன்றுக்கு வரும் வரையில் அந்த பகுதிகளுக்கான தேர்தலை மாத்திரம் பிற்போட்டு ஏனைய பகுதிகளுக்கான தேர்தலை நடத்த முடியும் என்று பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்

Related posts: