கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை தொடர சீனா இணக்கம் !

Sunday, October 16th, 2022

இலங்கையின் பிரதிநிதிகள் குழுவிற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களின் குழுவிற்கும் இடையே முதல் சுற்று பேச்சுவார்த்தை கடந்த 13 ஆம் திகதி வோசிங்டனில் நடைபெற்றுள்ளது.

இந்த இறையாண்மை பத்திரத்தை வைத்திருப்பவர்களுக்கு இலங்கை சுமார் 13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை செலுத்த வேண்டியுள்ளது.

இலங்கை தரப்பினருக்கு மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆகியோர் இந்த சந்திப்புக்கு தலைமை தாங்கியுள்ளனர்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்ற நிலையிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதற்கிடையில் கடந்த 13ஆம் திகதி, சீனாவின் நிதியமைச்சர் லியு குன், இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அழைத்து, கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை தொடர விருப்பத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: