மழையுடனான காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, August 8th, 2019

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை இந்தமாதம் 12ம் திகதி வரையில் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென்,மற்றும் வடமேல் மாகாண்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் மழையுடனான வானிலை காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இரண்டு விமானங்கள் மத்தளை விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதேவேளை, நாட்டின் பல்வேறு இடங்களை ஊடறுத்து சென்ற கடும் காற்றின் காரணமாக, பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தம்புள்ளை, கலோகஹஎல, களுந்தாவ, அழுத்கம போன்ற பகுதிகளில் நேற்று இரவு கடுமையான காற்று வீசியுள்ளது.இந்த பகுதிகளில் 28 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அத்துடன் வவுனியா ஊடாக வீசிய கடும் காற்றினால் 8 வீடுகள் சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் காலி  – உடுகும பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக, அந்த பகுதியில் மின்சார விநியோகம் தடை பட்டுள்ளது.

அதேநேரம் கொடகம பகுதியில் தொடருந்து நிலையத்துக்கு அருகில் தொடருந்து பாதையில் இரண்டு மரங்கள் முறிந்து வீழ்ந்தன. இதனால் களனிவெளி தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – மில்லகஹவ பிரதேசத்தில் பிரதான பாதையின் குறுக்கே மரணம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுளு;ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று அதிகாலை வீசிய கடும் காற்றின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

Related posts: