மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை நிறைவு – நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் வரலாற்று கண்காட்சி!.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் அழைத்துவரப்பட்ட மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அவற்றை நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் வரலாற்று கண்காட்சி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சிறகுகள் பண்பாட்டு மன்றம், உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம், கிராமிய ஒத்துழைப்பு மன்றங்கள் இணைந்து மலையாக மக்களின் 200 வது வரலாற்று நினைவு கூறும் வகையில் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிட பணிப்பாளர், கரைச்சி பிதேச செயலகத்தின் திட்டமிட பணிப்பாளர், எழுத்தாளர்கள், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாளொன்றுக்கு உணவில்லாமல் 22 ஆயிரம் சிறுவர்கள் உயிரிழப்பு!
மீண்டும் கொரோனா தொற்று பரவும் ஆபத்து ; தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு சுகாதார ...
நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க ப...
|
|