நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க பிரான்ஸ் – இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Tuesday, September 12th, 2023

செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இலங்கை கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபைக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக் கடற்கரைக்கு வரும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தன, இது இலங்கையின் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பை கடுமையாக பாதித்தது.

இதனையடுத்து, இந்த நிலைமைகளை கண்காணிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

பிரதமர் மஹிந்தவை வாழ்த்தியதன் மூலம் டக்ளஸின் அரசியல் நிலைப்பாடே சரியெனறு ஏற்றுக்கொண்டுள்ளார் சம்பந்த...
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வருடம் தீர்வுகளை அரசு வழங்கும் - பிரதமர் மகிந்த ராஜபக்ச தெர...
பல்வேறு வைரஸ்கள் பரவுவதைத் தடுப்பதற்கு முன்னர் சுகாதாரப் பரிந்துரைகளை கடைபிடியுங்கள் - பொதுச் சுகாதா...

நிர்ணய விலைக்கு உட்பட்ட பொருள் தொடர்பில் மாத்திரமே சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் - நுகர்வோர் அதிகார ச...
சில நாள்களில் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டம் - விமான ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கமுடியாத...
இந்துக்களின் தெய்வ வரலாறை திரிபுபடுத்துகின்றது சிங்களத் திரைப்படம் - அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர...