நாடு முழுவதும் ஒரு நாள் ஹர்த்தால்?

Thursday, May 4th, 2017

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு கோரி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரு நாள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

இவ்வாறானதொரு தீர்மானத்தை நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டி நடத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தீர்மானம் எடுத்துள்ளார் என்று  செய்திகள் வெளியாகியுள்ளன.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கம் தான் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை காலி முகத்திடலில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் பங்கேற்றிருந்ததன் காரணமாக கூட்டு எதிர்க்கட்சி தனது பலத்தை நிரூபித்துள்ளது என்று கட்நியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோரி நாடு முழுவதிலும் ஒரு நாள் ர்த்தால் போராட்டம் ஒன்றை நடத்த கூட்டு எதிர்க்கட்சித் தீர்மானித்துள்ளது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: