மலேஷியா செல்கின்றார் ஜனாதிபதி.!

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை வியாழக்கிழமை மலேசியாவுக்கு செல்கின்றார். இதன்போது பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மலேசிய அரசாங்கத்தின் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகளைப் வலுப்படுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுப்பட உள்ளார். சுற்றுலா, விவசாயம், பெருந்தோட்டத்துறை, கலாசாரம் மற்றும் இளைஞர் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வது குறித்த இரு நாட்டு தலைவர்களுடன் பரந்தளவில் கலந்துரையாடப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் மலேஷியாவிற்கு செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிபப்பிடத்தக்கதாகும்.
Related posts:
வேறு திணைக்களங்களுக்குரிய மேய்ச்சல் தரவைகளால் தாமதம் -மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம்
தூக்குத் தண்டனை விவகாரம் : ஜனாதிபதி தலைமையில் விசேட ஆலோசனை!
தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியக்குறைப்பு ...
|
|