தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியக்குறைப்பு – அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவிப்பு!

Monday, March 27th, 2023

பணிக்கு வராத மற்றும் கடந்த வாரம் புதன்கிழமை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியக் குறைப்பை விதிக்க தொழிலாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த விடயத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் எதிராக தேவையான சட்ட நடவடிக்கையும் அமைச்சினால் மேற்கொள்ளப்படும்.

அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை சீர்குலைக்கும் நடவடிக்கை எதிர்காலத்தில், அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை சீர்குலைக்க சில பிரிவுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்தந்த தொழிலில் உள்ள சில பிரச்சினைகள் தொடர்பான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வது வேறு விஷயம். எனினும், இவை அரசியல் உள்நோக்கம் கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகளாகும்.

தொழிலாளர் அமைச்சர் என்ற முறையில் உண்மையான தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எனது ஆதரவை வழங்குவேன்.

எனினும் அரசியல் உள்நோக்கம் கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் அரசுத்துறை வேலைகளில் சேர அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே

அரச ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை நிதி அமைச்சினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: