வேறு திணைக்களங்களுக்குரிய மேய்ச்சல் தரவைகளால் தாமதம் -மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம்

Friday, November 11th, 2016

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளுக்கு ஒதுக்கப்படும் காணிகள் வேறு ஒரு திணைக்களங்களுக்குரிய காணிகளாக காணப்படுவதால் அதனை விடுவித்து மேய்ச்சல் தரவைகளை அமைப்பதில் தாமதங்கள் காணப்படுவதாக மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

விவசாயத்தையும் கால்நடைவளர்ப்பையும் பிரதான வாழ்வாதாரத் தொழிலாகக்கொண்ட மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றபோதும் பயிர்ச்செய்கை காலங்களில் கால்நடைகளை பராமரிப்பதற்கு கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் எவையும் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில், கரைச்சி கண்டாவளை பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் ஏற்கனவே மேச்சல் தரவைகளுக்கு ஒதுக்கப்பட்ட கூடுதலான இடங்கள் பயிர்ச்செய்கை நிலங்களாகவும் குடியிருப்பு காணிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.

இதனால் கால்நடைப் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள கல்மடுப்பகுதியில் மேய்ச்சல்தரவை அமைப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் அளவீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட சமயம், குறித்த காணி வனவளத்தைக் களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குறித்த பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டத்தில் கால்நடைப்பண்ணையாளர்கள் விவசாயிகள் அதிகளவிலே காணப்படுகின்றனர். இருந்தாலும் மேய்ச்சல்; தரவைகளை ஒழுங்குபடுத்துவதில் பல சிரமங்களை நாங்கள் எதிர்கொண்டு வருகின்றோம். பல இடங்கள் மேய்ச்சல் தரவைகளுக்கு பிரதேச செயலாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளபோதும் அந்த காணிகள் வேறு,வேறு திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்ட அல்லது உரிமையான காணிகளாக இருப்பதனால் அந்;தந்த உரிய திணைக்களங்களிடமிருந்து விடுவித்து அதன் பின்னர் தான் மேச்சல் தரவைகளை அமைக்கமுடியும். இவ்வாறு விடுவிப்பதில் காலதாமதங்கள் காணப்படுகின்றன.

அவ்வாறான நிலமை சீர்செய்யப்படுகின்றபோது தான் மேய்ச்சல் தரவைகளுக்குரிய பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

sundaram

Related posts: