மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது – கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி வலியுறுத்து!
Wednesday, September 8th, 2021
அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளின் மூலம் கொரோனா திரிபை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே வலியுறுத்தினார்.
அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவதை விடுத்து, அரசியல் பேதங்களை மறந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்
Related posts:
வலிகாமம் மேற்கில் திண்மக் கழிவகற்றல் திடலை மீளமைக்க நடவடிக்கை!
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் - கல்வி அமைச்சர் தினேஷ் குணவர...
இலங்கையில் 14 ஆண்டுகளின் பின் பதிவாகிய மலேரியா மரணம் – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!
|
|
|


