மர்ம காய்ச்சலால் 9 பேர் பரிதாப மரணம்!
Tuesday, December 19th, 2017
கடந்த 20 நாட்களில் முல்லைத்தீவில் ஒருவகை காய்ச்சல் காரணமாக 9 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலனை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் குறித்த தகவலைஉறுதிப்படுத்தியுள்ளார்.
அவர்கள் ஒருவகை வைரஸ் தாக்கத்தினாலும் பெரும்பாலானோர் இன்ஃபுளுவன்சா வைரஸ் தாக்கத்தினாலும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள மருத்துவமனைகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இன்று மின்தடை
சவால்களை எதிர்கொண்டாலும் இலக்கை மறந்துவிடக்கூடாது - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் வலியுறுத...
இணையத்தளம் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்கள் அதிகரிப்பு - இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவி...
|
|
|


