மருந்து வகைகளில் 85 வீத தயாரிப்பு இலங்கையில் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

சேனக பிபிலே மருந்தகக் கொள்கையை நடைமுறைப்படுத்தி நாட்டிற்குத் தேவையான மருந்து வகைகளில் 85 வீதத்தை நாட்டில் தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு இல்லை. இதனால் நோயாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள் நோயாளிகளை பரிசீலனை செய்யும் போது ஆகக்குறைந்த ஒரு நோயாளிக்காக 10 நிமிடங்களை செலவிட்டு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
Related posts:
மாகாண அமைச்சர்களாக அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் நியமனம்!
சீருடை வவுச்சர் காலம் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிப்பு!
இறுதி பரிந்துரை கிடைக்கும் வரையில் தகனம் செய்வதை தொடருமாறு நிபுணர் குழு அறிவிப்பு!
|
|