மருந்துப் பொருட்களின் இறக்குமதி தொடர்பில் இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம் – சுகாதார அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Wednesday, October 4th, 2023
மருந்துப் பொருட்களின் இறக்குமதி தொடர்பாக இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களின் தட்டுப்பாடு நிலவிவருகின்றது.
அதுமாத்திரமல்லாது வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்பட்ட காலாவதியான மருந்துகளால் உயிரிழப்புச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
இந்நிலையில் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கை அரசாங்கம் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் மருந்துப்பொருட்களின் இறக்குமதி தொடர்பில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அடையாள அட்டை பெற 100 ரூபா - அமைச்சர் எஸ்.பி நாவின்ன !
பயணத் தடை நீக்கம் தொடர்பில் சனியன்று தீர்மானிக்கப்படும்!
ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்கும் சுற்றறிக்கை வெளியானது!
|
|
|


