இலங்கை இராணுவத்தில் புதிய பிரிவு!

Friday, February 10th, 2017

இலங்கை இராணுவத்தில், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி விவகாரங்களைக் கையாள்வதற்காக புதிய படை அணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பேரழிவு இரசாயன அவசரநிலைகளை சமாளிக்கும் நோக்கில் இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவினால் புதிய படைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக லெப்ரினன் கேணல் ரி.டி.பி.சிறிவர்த்தனவும் பிரதி கட்டளை அதிகாரியாக மேஜர் ஏ.யு.ஹிடெல்லாராச்சியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை  இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் 14 ஆவது பற்றாலியனின் ஒரு அங்கமாக இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படைப்பிரிவைச் சேர்ந்த படையினர் தாஜ் சமுத்ரா விடுதியில் இடம்பெறும் இரசாயன ஆயுதங்கள் தொடர்பான பயிற்சி நெறி ஒன்றில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CBRN-Response-Squadron-2

Related posts: