குற்றப்புலனாய்வுத் தகவல் மீளாய்வு மத்திய பணியகம் எனும் பெயரில் புதிய பிரிவு அமைக்க முடிவு!

Saturday, April 2nd, 2016

குற்றப்புலனாய்வுத் தகவல் மீளாய்வு மத்திய பணியகம் எனும் பெயரில் புதிய பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்த புதிய பிரிவை விரல் அடையாளப் பதிவு அலுவலகத்தில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் பதிவாகின்ற பாரதூரமான குற்றங்கள் தொடர்பிலான தகவல்களை நாளாந்தம் பொலிஸ் நிலையங்களிடமிருந்து புதிய தகவல் தொழில்நுட்ப முறையின் ஊடாக திரட்டும் நடவடிக்கைகள் இந்த புதிய பிரிவின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

திரட்டப்படும் தகவல்கள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அடையாளம் காணப்படும் குற்றச்செயல்கள் மற்றும் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை உத்தியோகத்தர்களை அறிவுறுத்துவதற்காக இந்த புதிய பிரிவு ஸ்தாபிக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: