மருதங்கேணிவிவகாரம்: பிரதேச செயலரிடம் விளக்கம் கோரியுள்ளது உள்நாட்டலுவல்கள் அமைச்சு!

Saturday, June 9th, 2018

யாழ்ப்பாண மாவட்டத்துக்குட்பட்ட மருதங்கேணிப் பிரதேச செயலாளர் இனத்துவேசமாக நடந்துகொள்வதாக கூறி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் விளக்கம் கோரிக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கில் வேறு மாவட்ட மீனவர்கள் தொழில் புரியும் இடத்துக்கான அனுமதி பிரதேச செயலாளரால் வழங்கப்படவில்லை. அங்கு வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வெளி மாவட்ட மீனவர்கள் தங்கிநின்று கடலட்டை பிடித்து வருகின்றனர்.

இந்த சட்டவிதிமுறை மீறிய விடயங்களை பிரதேச செயலர் சுட்டிக்காட்டியதால் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் முறையிட்டுள்ளது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு குறித்த பிரதேச செயலாளரிடம் எழுத்தில் விளக்கம் கோரியுள்ளது. அதாவது தெற்கில் இருந்து வந்தவர்களுக்கு சட்டத்துக்கு முரணாகச் செய்யும் தொழிலுக்கு உதவி புரியவில்லை என்பதன் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related posts:


முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மத்திய அரசால் நேரடியாக செயற்படுத்தப்படுவதால் மாகாணத்தின் இருக்கின்ற அத...
க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாத 1 லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு; 45 ஆயிரம் பேர் அரச சேவையில் இ...
சுமந்திரன எம்.பியை தோற்கடித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரானார் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!