க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாத 1 லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு; 45 ஆயிரம் பேர் அரச சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Tuesday, December 7th, 2021

க.பொ.த. சாதாரண தரத்தைப் பூர்த்தி செய்த 1 இலட்சம் மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரச சேவைக்கு இதுவரை 45,000 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள தாகவும் சமுர்த்தி, நுண் நிதி, சுயதொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

2015-2019 காலப்பகுதியில் அரச சேவைக்கு வழங்கப்பட்ட மொத்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 22,145 ஆகும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு மாத்திரம் 60,000 பட்டதாரி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த  60 ஆயிரம் பேருக்கு பயிற்சிக் காலம் முடிந்து அவற்றை உறுதிப்படுத்தத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், க.பொ.த சாதாரண தரம் வரை படித்த அல்லது க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத 100,000 சகோதர, சகோதரிகளை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: