10 லட்சம் நோயாளிகள் பாதிப்பு!

Tuesday, July 5th, 2016

வைத்தியர்களின் போராட்டத்தினால் 10 லட்சம் பேருக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்திய கலாநிதி நலிந்த ஹேரத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலையில் நேற்றைய தினம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.இதனால் வைத்தியசாலைகளின் வெளி நோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளச் சென்ற பத்து லட்சம் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் போராட்டம் நடத்தப்பட்டது.இதனால் நாடு முழுவதிலும் நேற்றைய தினம் செய்யப்படவிருந்த ஆயிரம் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன.

சிகிச்சை பெற்றுக்கொள்ள வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியவில்லை, வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம் அடைந்தன. இதனால் தொழிற்சங்கப் போராட்டம் வெற்றியளித்துள்ளது.

எச்சரிக்கை விடுக்கும் நோக்கிலேயே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. திட்டமிடாதவாறு எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படக் கூடாது, மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts: