இலங்கைக்கான கடற்பகுதி மேலும் விரிவுபடுத்த ஐ.நா.இணக்கம்!

Tuesday, November 28th, 2017

2018 ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் சர்வதேச கடற்பிராந்தியத்தில் இலங்கைக்கான கடற்பகுதி மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

குளங்களில் நீர்வாழ் உயிரினங்களை அபிவிருத்தி செய்வதற்காக இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் என்ற ரீதியில் ஐக்கியநாடுகள் சபையின் அபிவிருத்தி பிரிவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இதற்கான திட்டம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

000

இலங்கை படுதோல்வி: சாதனையுடன் வென்றது இந்தியா !

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 239 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

1ம் இன்னிங்ஸ்  இலங்கை 205/10  இந்தியா 610/6D

2ம் இன்னிங்ஸ்  இலங்கை 166/10

இதன்படி இந்தியா பெற்ற மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியாகவும், இலங்கை பெற்ற மிகப்பெரிய தோல்வியாகவும் இந்த போட்டி அமைகிறது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரவிச்சந்திரன் அஷ்வின் மொத்தமாக 8 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி அவர் குறைந்த போட்டிகளில்(54) 300 விக்கட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

Related posts: