புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டு வருவது குறித்து அவதானம்!
Tuesday, April 19th, 2022
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்கும் வகையிலான புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டு வருவது குறித்து இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த யோசனையை முன்வைத்த போதும், அதற்கு காலம் எடுக்கும் என்ற ரீதியான கருத்துக்கள் அதிகம் முன்வைக்கப்பட்டிருந்தன.
அதுவரையில் 20ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி 19ஆம் திருத்தச் சட்டத்தை மீள ஸ்தாபிக்கும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
டெங்கு' நோய் அனர்த்த நிலையை ஏற்படுத்தும் - தடுப்பதற்காக அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சு...
இலங்கைக்கான நன்கொடை அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடை அதிகரித்தது இந்தியா!
கொள்கலன் அனுமதி தாமதம் - இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 30 கப்பல்கள்!
|
|
|


