மரம் வெட்டும் இயந்திரங்கள் பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு!
Friday, March 1st, 2019
மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்வதற்கான கால எல்லை இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி அரசு, அரை அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்படும் அனைத்து மரம் வெட்டும் இயந்திரங்களும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த வேலைத்திட்டம் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேயிலைத் தொழிற்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு - ஆசிய அபிவிருத்தி வங்கி!
நெதர்லாந்து கடற்பகுதியில் சரக்குகள் கப்பலொன்றில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
பலாலி சர்வதேச விமான நிலைய பயணிகள் வசதிகளை 200 மில்லியன் ரூபாய் செலவில் விரிவுபடுத்த நடவடிக்கை - அமைச...
|
|
|


