மரநடுகை தொடர்பில் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் விசேட அறிவிப்பு!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டில் அமையும் சுபவேளையில் இருந்து மரக்கன்று ஒன்றை நாட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கையின் மூலம் அதிகளவான மரக் கன்றுகளை நாட்டில் நாட்டுவதற்கான சூழல் உருவாகும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
டுதமிழ், சிங்கள புத்தாண்டில் உதயமாகும் சுபவேளை தொடர்பில் மக்கள் கூடிய கவனம் எடுப்பர். அதன் காரணமாகவே மரக்கன்று ஒன்றை நடுவதற்கு ஊக்குவிக்கின்றோம்.
இந்த யோசனையை செயற்படுத்தினால் எம்மால் முன்னோக்கி பயணிக்க முடியும்.டு எனவும் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
கல்முனையில் 59 பேருக்கு டெங்கு நோய் தொற்று : சிறுவன் பலி!
சேற்றுக்குள் சிக்கிய இளைஞன் உயிரிழப்பு – ஆழம் பார்க்க இறங்கியபோது விபரீதம்!
சிறுபோக சிறப்பான அறுவடை கிடைக்குமாயின் உணவு நெருக்கடி ஏற்படாது - விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|