மீண்டும் ரயில்வே ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பில்! 

Wednesday, January 31st, 2018

புகையிரத உதவி சாரதிகள் சேவைக்கான ஒத்திவைக்கப்பட்ட பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான பொதுப் பரீட்சையினை விரைவில் நடத்துமாறும் இல்லாவிடின்நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அனைத்து இலங்கை ரயில்வே பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த 300 இற்கும் அதிகமான பதவி வெற்றிடங்களானது 2011ம் ஆண்டுக்கு பின்னர் ஊழியர்களை சேர்த்துக் கொள்ளாததால் ஏற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் பிரதானசெயலாளர் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் புகையிரத சேவையின் போது உத்தியோகபூர்வமாக நேரடி ஈடுபாடு கொண்டிருக்கும் உதவி சாரதி சேவையானது தற்போது பெரும் சர்ச்சைக்குரியதாகஇருக்கின்றமையும் இது குறித்த நீதிமன்றத் தீர்ப்பினையும் குறித்த அதிகாரிகள் கவனத்திற் கொள்ளாது இருக்கின்றமை குறித்தும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

Related posts: