மரண தண்டனை விவகாரம்: ஆழ்ந்த கவலை தெரிவிக்கும் கனடா!

இலங்கையில் மரண தண்டனையை மீள அமுலாக்குவதற்கு இலங்கை பரிசீலித்து வருவதாக வெளியான தகவல் குறித்து தாம் ஆழ்ந்த கவலையடைவதாக கனடா தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கைக்கான கனடா தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் மீண்டும் மரணதண்டனை அமுல்படுத்துவதானது, சர்வதேச அளவில் இலங்கையின் கௌரவத்தை உயர்த்துவதற்கு ஒருபோதும் உதவாது.
மரணதண்டனை என்பது மனித கௌரவத்திற்கு முரணானது. இந்நிலையில், மரணதண்டனையை நிறைவேற்றுவதில்லை என்ற தனது நீண்ட கால கொள்கையை இலங்கை கைவிட தீர்மானித்துள்ளது.
இந்த வியடம் குறித்து கனடா மிகவும் கவலையடைகின்றது. சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் அவசியமான ஒன்றாகும்.
எனினும், மரணதண்டனை சட்டவிரோத போதைப்பொருள் வர்த்கத்தை கட்டுப்படுத்தும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. நீதி தொடர்பில் மீள முடியாத தவறுகளிற்கு மரணதண்டனை வழிவகுக்கலாம்.
ஆகையினால், அனைத்து வழக்குகளிலும் மரணதண்டனையை கனடா கடுமையாகவும் எந்தவித தயக்கமும் இன்றி எதிர்க்கின்றது என தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
Related posts:
|
|