மரண தண்டனை நிறைவேற்றம் – ஜனாதிபதியின் அடுத்த அதிரடி அறிவிப்பு!
Wednesday, July 17th, 2019
மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றுமொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கும் சட்டத்தின் படி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குல்களை நடத்தியவர்கள், துணை நின்றவர்கள், திட்டமிட்டவர்கள், தாக்குதல்களை தடுக்காதவர்கள் என்ற அனைவரும் தண்டனைக்கு உட்பட வேண்டியவர்களாவர் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பில் நாட்டில் இருந்து தப்பி சென்ற முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துமாறு தாம் சிங்கப்பூர் பிரதமரிடம் நேரில் கோரிக்கை விடுத்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|
|


