எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, May 24th, 2022

எரிபொருள் கொள்வனவு தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் பேசியதாக அமைச்சர் கூறியுள்ளார்.

ரஷ்யா உட்பட வேறு எந்த நாட்டிலிருந்தும் குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தால், அதற்காக பாடுபடுவேன் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே புதிய நிதி அமைச்சர் தொடர்பான முடிவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே எடுப்பர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போது பதில் நிதிமையச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுகின்றார் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: