மின்வெட்டை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Wednesday, March 2nd, 2022

மின்வெட்டினை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் என பொதுப்பயன்பாட்டு ஆiணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் மின்சார விநியோகத்திற்கு அவசியமான எரிபொருளை பெறுவதற்கான உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கும் மத்திய வங்கிக்கும் உத்தரவிட்டுள்ளார் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஏழரை மணிநேர மின்வெட்டிற்கு அனுமதி வழங்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம், மின் பிறப்பாக்கிகளை இயக்குவதற்கான எரிபொருள் இல்லாததே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எங்களால் எதுவும் செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் இன்று (02) இரு தடவைகளில் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கான நடவக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

26 ஆண்டுகளுக்கு பின்னர், இன்றையதினம், ஏழரை மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் 05 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மாலை 06 மணியிலிருந்து இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இதனிடையே, களனிதிஸ்ஸ மின் நிலையம் செயலிழந்து ஒரு மாதம் பூர்த்தியடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

செயலிழந்த சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தில் தற்போது மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுவதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.

நீர்மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் 40 வீதமாக குறைவடைந்துள்ளதாக மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, 19 வீத நீர் மின் உற்பத்தி செய்யப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.

000

Related posts: