மயிலிட்டி,கட்டுவன் பிரதானவீதியைமுழுமையாகவிடுவித்து மக்கள் பாவனைக்கு ஏற்றவாறு புனரமைப்பு செய்யப்படவேண்டும். மீள்குடியேற்றஅமைச்சர் சுவாமிநாதனிடம்,ஈ.பி.டி.பியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளர்ஐங்கரன் கோரிக்கை!

Wednesday, April 25th, 2018

பாதுகாப்பு வலயமாகவிருந்து அன்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி, கட்டுவன் பிரதான வீதியை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், மக்கள் பாவனைக்கு ஏற்றவாறு புனரமைப்புச் செய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் வலி கிழக்கு; பிரதேச சபை உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளருமான இராமநாதன் ஐங்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் (25.04.2018) கொழும்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வழிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களையும், அவரது செயலாளர்களையும் சந்தித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களை உள்ளடக்கிய விN~ட குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே மேற்குறிப்பிட்ட கோரிக்கையை விடுத்த ஐங்கரன் அவர்கள் மேலும் தமதுகோரிக்கையில்,
மயிலிட்டி சந்தியிலிருந்து கட்டுவன் சந்திநோக்கி செல்லும் பிரதான வீதியில் உள்ளகிராமக் கோட்டுசந்திவீதி முழுமையாக விடுபடாமல் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்கியிருப்பதுடன், அந்தவீதி, தனியார் காணிகளை ஊடறுத்து அதன் பழைய அமைவிடத்தை இழந்திருப்பதையும் சுட்டிக்கட்டினார்.
எனவே அவ்வீதி முழுமையாக விடுவிக்கப்பட்டு, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வளைவு வீதியானது நேரான வீதியாக புனரமைக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன் வடக்கில் கால்நடைகளை வளர்ப்போரும், கோழி வளர்ப்பில் ஈடுபடுவோரும் தென் இலங்கையிலிருந்தே கால்நடை மற்றும் கோழித்தீவனங்களை கொள்வனவு செய்வதுடன், கூடுதல் விலையையும் கொடுக்கவேண்டியநிலையிலேயே யாழ்ப்பாண மக்கள் இருப்பதால் அச்சுவேலி தொழிற்பேட்டையில் அதற்கான தொழிற்சாலை ஒன்றை அமைக்க மீள்குடியேற்ற அமைச்சு உதவவேண்டும் என்றும் அமைச்சர் சுவாமிநாதனிடம் கோரிக்கைவிடுத்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சரின் செயலாளர்,கால்நடைமற்றும் கோழித் தீவனங்களைத் தயாரிக்கும் உற்பத்திச் சாலையை கூட்டுறவு முறைமையில் நிறுவபயனாளிகள் முன்வந்தால் அவர்களுக்கான மேலதிக உதவிகளைப் பெற்றுத்தருவதற்கும், தேவையான இயந்திரங்களைப் பெற்றுத் தருவதற்கும் அமைச்சின் ஊடாக உதவமுடியும் என்றும் தெரிவித்தார்.
அவ்வாறு உற்பத்திச் சாலை உறுவாக்கப்படுமாக இருந்தால், எமதுமக்கள் கால்நடைகள் மற்றும் கோழித் தீவனங்களை குறைந்தவிலையிலும், காலதாமதமின்றியும் பெற்றுக் கொள்வதுடன், பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றும் வலிகிழக்கு பிரதேசசபையின் உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோப்பாய் பிரதேசநிர்வாகச் செயலாளருமான இராமநாதன் ஐங்கரன் மேலும் தெரிவித்தார்.

IMG_1502

 

IMG_1500

Related posts: