மந்திகை ஆதார மருத்துவமனைக்கு வெளிநோயாளர்களுக்கான அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 75 சதவீத நேர்மறை முடிவுகள் – அதிர்ச்சியில் சுகாதார பிரிவினர்!
Tuesday, August 31st, 2021
பருத்தித்துறை – மந்திகை ஆதார மருத்துவமனைக்கு வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு வருகை தந்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 30 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 40 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே 30 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 75 சதவீத நேர்மறை முடிவாகும்.
அவர்கள் 30 பேரும் மருத்துவர்களின் ஆலோசனையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டியவர்கள், இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்படவேண்டியவர்கள் மற்றும் வீடுகளில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என பிரித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
ஏறாவூரில் தாயும் மகளும் கொலை !
அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்கள் மூலம் சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
கடனட்டை வட்டிவீதம் குறையும் சாத்தியம் - மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!
|
|
|


