மந்திகை ஆதார மருத்துவமனையில்  கண்பரிசோதனை சிகிச்சை ஆரம்பம்!

Saturday, February 10th, 2018

பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனையில் கண்பரிசேதனைச் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மாகாணத்தில் உள்ள நான்கு ஆதார மருத்துவமனைகளில் கண்பரிசேதனைக்கான மருத்துவர் நியமிக்கப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கண்சிகிச்சைப்பிரிவில் கடமையாற்றி ஓய்வு பெற்ற கண்சிகிச்சை நிபுணர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு நான்கு ஆதார மருத்துவமனைகளிலும் வாரத்தில் ஒருநாள் சிகிச்சை அளித்து வந்தார் அதனால் பல பிரதேசங்களைச் சேர்ந்த நோயாளர்கள் தமக்கு அருகில் உள்ள ஆதார மருத்துவமனையில் சிகிச்சையினை  பெற்று மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குச் சென்றனர்

சிகிச்சை அளித்து வந்த கண்சிகிச்சை நிபுணர் தனது ஒப்பந்த காலம் நிறைவடைந்ததும் சேவையிலிருந்து விலகியுள்ளனர் .இதனால் ஆதார மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குச் செல்லும் வேளையில் பெரும் சிரமத்தின் மத்தியில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் வடமராட்சி பிரதேச பொது அமைப்பினர் விடுத்த வேண்டுகோளையடுத்து மாகாண சுகாதாரத் திணைக்களத்தினர் கண்பரிசோதனைக்கான அலுவலரை மந்திகை மருத்துவமனைக்கு நியமித்து கண் பரிசோதனைக்கான கருவியையும் அனுப்பி வைத்தனர்.அதையடுத்து அங்கு தனியான பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது

இந்த சிகிச்சைப்பிரிவில் ஏனைய பிரதேச மக்கள் தத்தமது பிரதேச மருத்துவ மனை பொறுப்பதிகாரியின் சிபாரிசுடன் வருகை தந்து கண் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: