மத்திய வங்கி மோசடிதொடர்பான கோப் குழுவின் அறிக்கை 25ஆம் திகதி சமர்ப்பிப்பு!

Friday, October 21st, 2016

இலங்கை மத்திய வங்கியின் மோசடியுடன் தொடர்புபட்டது என்று கூறப்படும் பேர்பச்சுவல் ட்ரசரி நிறுவனம் கடந்த வருடம் ஈட்டிய அசாதாரண இலாபம் தொடர்பில் கோப் குழு நடத்திய விசாரணையின் இறுதி அறிக்கை இம்மாதம் 25ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி இந்த அறிக்கையை பூர்த்தி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்று தெரியவருகின்றது.இந்த அரசு ஆட்சிப்பீடமேறியதும், அது முதன் முதல் எதிர்கொண்ட ஊழல், மோசடிக் குற்றச்சாட்டு மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடியாகும்.

இந்த விவகாரம் முடிவின்றித் தொடர்கின்றது. மஹிந்த தரப்பு அவர்களின் அரசியல் தேவைக்காக முடிந்தளவு இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றது.

இந்தநிலையில், இந்த மோசடிக்கு காரணம் எனக் கூறப்படும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மகேந்திரனின் மருமகனின் நிறுவனமான பேர்பச்சுவல் ட்ரசரி என்ற நிறுவனம் 2015இல் 500 கோடி ரூபாவை இலாபமாகப் பெற்றது என்ற தகவல் வெளியாகியதால் இந்த விவகாரம் இன்னும் சூடு பிடித்துள்ளது.

இதற்கு எதிராக மஹிந்த தரப்பு கடும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பில் கோப் குழு மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கை இந்த மாதம் 25ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.

central-bank

Related posts: