மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை – உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு!

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் தமது வியாக்கியானத்தை உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்புவதாக அண்மையில் அறிவித்திருந்தது.
இதன்படி உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை அறிவித்த சபாநாயகர் மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தை சாதாரணப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் எனவும் குறிப்பிட்டார்.
Related posts:
ஜூலை 12 ஆம் திகதியுடன் பொதுமன்னிப்பு காலம் நிறைவு!
தென்னைச் செய்கையாளர்களுக்கு மானியக் கொடுப்பனவு வழங்கல்!
இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஜெய்சங்க...
|
|