மத்திய வங்கியின் வட்டி வீத உயர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!
Saturday, March 4th, 2023
மத்திய வங்கியின் வட்டி வீத உயர்வை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. அத்துடன் இலங்கை அரசாங்கம் மீண்டும் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துவது இந்தத் தருணத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது
இந்த நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு அது பெரும் உதவியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுத்து வரும் செயற்பாடுகளை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
முன்பதாக
இலங்கை மத்திய வங்கி அதன் நாணய கொள்கையில் வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த வட்டி விகிதங்கள் இன்றுமுதல் அதிகரிக்கப்படும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் பணவீக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுவதாக மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


