தீர்வு கிடைக்காத நிலையில் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்!
Friday, July 24th, 2020
பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் சுகயீன அடையாள விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதுவரை தமது கோரிக்கைகளுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து உரிய தீர்வு வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஒரு சிலரின் அவசியமற்ற தீர்மானங்களினாலே இந்த நிலைமைக்குக் காரணம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொது சுகாதார பரிசோதகர்களின் உண்மை யான பிரச்சினைகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமையத் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நடவடிக்கை எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் இது - ஜனாதிபதி!
தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் விரைவில் மின் கட்டணத்தைச் செலுத்துங்கள் - இலங்கை ம...
2020 ஆம் ஆண்டை விடவும் 2021 ஆம் ஆண்டில் ஒருலட்சம் கடவுச்சீட்டுக்கள் அதிகமாக விநியோகம் - குடிவரவு குட...
|
|
|


