மத்திய வங்கியின் நிதிச்சபை கூட்டம் இன்று!
Friday, November 4th, 2016
மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் டிதாடர்பான கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக மத்திய வங்கியின் நிதிச்சபை கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமார சுவாமி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த வாரம் கோப் குழுவின் அறிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அறிக்கையில் மத்தியவங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த அறிக்கை தொடர்பான அடுத்தக்கட்ட செயற்பாடு குறித்த இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடபபட்டு நிதி சபை தீர்மானிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
ஈ.பி.டி.பியின் பிரான்ஸ் கிளையால் வேலணையில் ஒருதொகுதி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வ...
சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள்!
‘டவ் தே’ அதிதீவிர புயலாக வலுப்பெற்றது!
|
|
|


