ஈ.பி.டி.பியின் பிரான்ஸ் கிளையால் வேலணையில் ஒருதொகுதி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!

Monday, February 18th, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளையினரால் வேலணை பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எண்ணக்கருவான தாயக மக்களின் மீழெழுச்சிக்கு புலம்பெயர் தேச உறவுகள் கரங்கொடுக்க வேண்டும் என்பதற்கிணங்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள வறிய மக்களது வாழ்வியல் நிலைகளை மேம்படுத்துவதற்காக கட்சியின் பிரான்ஸ் கிளை பல்வேறு உதவித் திட்டங்களை மேற்கொண்டு வருின்றது.

இந்நிலையில் முன்பள்ளிச் சிறார்களின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் குறித்த ஆசிரியர்கள் தாம் எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் கட்சியின் வேலணை பிரதேச உறுப்பினர் திருமதி ஜெயகாந்த் அனுஷியா அவர்களது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

குறித்த ஆசிரியர்களது தேவைப்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கட்சியின் வேலணை பிரதேச உறுப்பினர் திருமதி ஜெயகாந்த் அனுஷியா அவர்களால் கொண்டுசென்றதற்கு இணங்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரான்ஸ் கிளையின் உப அமைப்பாளர் சிவகரன் (டேவிட்) அவர்களால் குறித்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணண், கட்சியின் மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் யாழ்ப்பாணம் அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் திருமதி ஜெயகாந்த் அனுசியா, கட்சியின் வேலணை பிரதேச உதவி நிர்வாக செயலாளர் பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டு துவிச்சக்கரவண்டிகளை வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Related posts: