மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதி நவம்பர் 15 ஆம் திகதிக்குள் பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்படும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ!

Monday, September 13th, 2021

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதி, நவம்பர் 15 ஆம் திகதிக்குள் பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்படும் என நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒன்பது அல்லது பத்து மாதங்களுக்கு முன்பு மத்திய அதிவேக நெடுஞ்சாலையை எங்களால் நிறைவு செய்திருக்க முடியும். ஆனால் கடந்த நல்லாட்சி அரசாங்கம் தங்களின் நண்பர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியதால் இது முற்றிலும் தாமதமானது.

இல்லையெனில் இந்த நாட்டு மக்கள் சுமார் 10 மாதங்களுக்கு முன்பு மத்திய அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தியிருக்க முடியும். அதனால் அமைச்சரவையில் அனுமதியுடன் வேலை செய்யாத ஒப்பந்ததாரர்களை நாங்கள் இரத்து செய்தோம்.

நீதிமன்றத்திற்குச் சென்று அங்கு எட்டப்பட்ட பொது உடன்பாட்டின் படி நவம்பர் 15 ஆம் திகதி மீரிகம முதல் குருநாகல் வரையிலான பணியை நிறைவு செய்து பொதுமக்களுக்காக திறக்க இருக்கிறோம்.

அந்தவகையில் நாங்கள் சரியான முடிவுகளை எடுக்கிறோம் என்று மக்கள் கூறுகின்றனர். அதேநேரம் நாங்கள் அரசியல் பழிவாங்கல் மேற்கொள்ள முயலவில்லை. அரசியல் பழிவாங்கல் செய்திருந்தால், குற்றவாளிகள் இப்போது சிறையில் இருந்திருப்பார்கள். நாம் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய விரும்புகிறோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே எங்கள் ஒரே எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்திருந்த அமைச்சர் ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைவாக நாடு முழுவதும் வீதிகளின் இருபுறமும் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நடும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: