மதம் அல்லது இன ரீதியாக அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்படாது – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, March 26th, 2021

அரசியல் கட்சிகளின் பதிவின் போது, மதம் அல்லது இன ரீதியாக அரசியல் கட்சிகளை பதிவு செய்வதில்லையென்ற தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படும்போது அதன் உத்தியோகபூர்வ பெயர் எந்தவொரு மதம் அல்லது இனத்தின் பெயரைக் கொண்டிருந்தால் அவ்வாறான கட்சிகளை பதிவு செய்வதில்லை என்ற தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.

நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கிணங்க அரசியல் கட்சி ஒன்று தேசிய கட்சி என்ற ரீதியிலேயே பதிவு செய்யப்படும்.

இது குறித்து ஆணைக்குழுவின் அமர்வில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர்கள் அவ்வாறு மத அல்லது இன ரீதியில் அமைந்திருந்தால் அதனை திருத்தம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, அவ்வாறு சம்பந்தப்பட்ட கட்சிக்கு அறிவித்து நியாயமான கால அவகாசம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: