தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : பரிந்துரைகளை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை!

Friday, June 26th, 2020

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஆராய்ந்து அடுத்த சில வாரங்களில் பரிந்துரைகளை முன்வைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் தோட்ட உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு இலகுவாக அமையும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 750 ரூபாவுக்கு மேலதிகமாக தேயிலை விலைக்கான கொடுப்பனவு, உற்பத்தி மற்றும் வரவுக்கான கொடுப்பனவுகள் அடங்கலாக நாள் ஒன்றுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விடுத்துள்ள கோரிக்கையின் பிரகாரம் கம்பனிகளுடன் அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தோட்டக் கம்பனிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து இத்தருணத்தில் அவதானம் செலுத்த வேண்டுமென இலங்கை ஊழியர் சங்கம் இந்தச் சந்திப்பில் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஏப்ரல் 21 தாக்குதல் விவகாரம் : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடும் எச்சரிக்கை!
கொரோனா தொடர்பில் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 2 ஆவத...
நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்கு திரும்பும் – பிரதமர் ரணில் விக...